உங்கள் மொபைலைத் தானாகவே காப்புப் பிரதி எடுக்கவும் Google கிளவுட் சேமிப்பகத்தை நிர்வகிக்கவும் Google One ஆப்ஸ் உதவுகிறது.
• ஒவ்வொரு Google கணக்குடனும் கிடைக்கும் 15 ஜி.பை. இலவசச் சேமிப்பிடத்தைப் பயன்படுத்தி உங்கள் மொபைலில் உள்ள படங்கள், தொடர்புகள், மெசேஜ்கள் போன்ற முக்கியமானவற்றைத் தானாகவே காப்புப் பிரதி எடுக்கலாம். மொபைல் உடைந்துவிட்டாலோ தொலைந்துவிட்டாலோ அதை மேம்படுத்தினாலோ அதிலுள்ள அனைத்துத் தரவையும் உங்களது புதிய Android சாதனத்திற்கு மீட்டெடுத்துக்கொள்ளலாம்.
• உங்களது தற்போதைய Google கணக்கின் சேமிப்பகத்தை Google Drive, Gmail, Google Photos ஆகிய அனைத்திலும் நிர்வகிக்கலாம்.
மேலும் பலன்களைப் பெற Google One மெம்பர்ஷிப்புக்கு மேம்படுத்துங்கள்:
• உங்களது முக்கியமான தருணங்கள், திட்டப்பணிகள், டிஜிட்டல் கோப்புகள் ஆகியவற்றுக்குத் தேவையான சேமிப்பிடத்தைப் பெறுங்கள். உங்களுக்கு ஏற்ற திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
புதுப்பிக்கப்பட்டது:
28 ஏப்., 2025